ஞாயிறு, 4 டிசம்பர், 2011

Car உடைப்பு; தாக்குதல் - நடிகை புவனேஸ்வரி மீது புகார்


தியாகராயநகர் சிங்காரம் தெருவில் வசித்து வரும் பைனான்சியர் அசோக் குமார் கடந்த 29-ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். 
அதில் நடிகை புவனேஸ்வரி என்னிடம் வாடகைக்கு கார் எடுத்திருந்தார். அதற்கான வாடகை தொகையை (மாதம் ரூ.40 ஆயிரம்) தராமல் இழுத்தடித்து வருகிறார். எனது காரும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.
இதுபற்றி கேட்டபோது கார் வெளியூரில் சூட்டிங்கில் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து காரை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த நடிகை புவனேஸ்வரி, வாடகை கார் திருட்டு போய்விட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பைனான்சியர் அசோக்குமார் தனது வீட்டு முன்பு நின்று போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.


அப்போது மர்ம கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் கார் கண்ணாடி மீது பெரிய கல்லை தூக்கி போட்டது. இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. 
இதுகுறித்து பாண்டி பஜார் போலீசில் அசோக்குமார் புகார் செய்தார். அதில் புவனேஸ்வரியின் ஆட்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக