சனி, 3 டிசம்பர், 2011

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்: குஷ்பு


நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். கலைஞர் ஆட்சியின் அருமை, பெருமையை தமிழ்நாட்டு மக்கள் இன்று உணருகிறார்கள். இன்னைக்கு தமிழ்நாட்டு மக்கள் கலைஞர் ஆட்சியில எவ்வளவு மரியாதையா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம் என இன்னைக்கு உணருகிறார்கள். தப்பை உணர்ந்துகிட்டதா சொல்லிக்கிட்டு இருக்காங்க. உண்மையிலேயே தலைவர் அருமை, பெருமையை உணர்ந்துகிட்டீங்க. அதுக்காக அதிமுகவுக்கு நாம நன்றி சொல்லியாகனும். ஒரு ஒரே நம்மையை அவங்க ஆட்சியில செய்திருக்காங்க. தலைவர் அருமை, பெருமையை மக்களுக்கு அவுங்களே சொல்லிக்கொடுத்திட்டாங்க.
இந்த அம்மா சமீபத்தில் கொடநாடு போறேங்கிறாங்க. ஏன் மறுபடி கொடநாடு போகனும். அங்கிருந்து வேலை செய்வாங்களாம். ஏன் இங்கிருந்து வேலை செய்யமாட்டாரா. கலைஞர் எங்கியாவது லீவு எடுத்துகிட்டு அங்க போறேன். இங்கே போறேன் என்று போனாரா. 24 மணி நேரமும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும், அவர்களுடைய நன்மைக்காவும் யோசிக்கிற சிந்திக்கிற ஒரே தலைவர் கலைஞர். 

பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே 01.12.2011 கூட்டத்தில்  குஷ்பு பேசியதாவது:
பம்பரம் கூட சாட்டை இருந்ததான் சுத்துங்க. ஆனால் பதவி என்கிற சாட்டை இல்லாம தமிழகம் முழுவதும் சுத்திக்கிட்டு வர்றது நம்ம த
ளபதி அவர்கள்தான். யாருக்காக, மக்களுக்காக. 
இந்த அம்மா மட்டும் எனக்கு வசதிக்கு ஏத்த மாதிரி நான் மக்களுக்கு வேலைசெய்வேன். எனக்கு எங்கே வந்து நிம்மதி இருக்கோ அப்படி தான் நான் வந்து வேலை செய்வேன். பண்ணுங்க. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலி மக்கள். கொந்தளிச்சி கேள்வி கேட்க போறாங்க. அந்த நேரம் வந்துடுச்சு. புத்திசாலித்தனமா உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வரியை ஏத்தியிருக்காங்க. முன்னாடியே ஏத்திருந்தாங்கன்னா ஒரு ஓட்டுக்கூட வந்திருக்காது. ஒரு டெபாசிட் கூட வந்திருக்காது. அது அவங்களுக்கு தெரியும். அதனால் தான் அவுங்க உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சவுடனேயே வரியை ஏத்தியிருக்காங்க. ரொம்ப புத்திசாலியின்னு நினைப்பு. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து கேள்வி கேட்கத்தான் போறாங்க. 5 வருஷம் காத்திருக்க வேண்டாம். கூடிய சீக்கிரம், அந்த நேரம் வரப்போகுது.

ஒரே ஒரு விஷயம் உங்களுக்கு சொல்ல விரும்புறேன். கஷ்டத்தில் இருக்கும்போது குரல் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு கோபாலபுரம்
என்னைக்குமே இருக்கு. கஷ்டப்படும்போது ஆலயம் போல அண்ணா அறிவாயலம் உங்களுக்கு என்னைக்குமே இருக்கு. மூச்சு இருக்கும் வரைக்கும் தமிழ் மக்களை மட்டும் கைவிட மாட்டார் நம்ம தலைவர் கலைஞர் அவர்களும், நம்ம தளபதி அவர்களும். இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக