சனி, 3 டிசம்பர், 2011

என்மீது குற்றம் இல்லை... இதை நிரூபிப்பேன்!- கனிமொழி

என்மீது எந்த குற்றமும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிப்பேன் என்றார் கனிமொழி எம்பி.
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆன அவர், சென்னைக்கு கிளம்பும் முன் முதல் முறையாக டெல்லி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்புவதால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே, இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம்.
ஜாமீன் கிடைத்துள்ளது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முதல் முன்னேற்றம். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னோடு பலரும் ஜாமீன் பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன். இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளியே வருவேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக