செவ்வாய், 13 டிசம்பர், 2011

கேரளாவில் 8 தமிழக மீனவர்கள் கைது: என்ஜின்களை பறித்துச் சென்ற போலீசார்


Fishermen
திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்து உள்ளது பிளாங்கட் கடற்கரை. அந்த பகுதியில் தமிழக மீனவர்கள் 8 பேர் மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களை கேரள போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைதானவர்கள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் வைத்திருந்த காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், மீன் பிடி வலைகள், படகில் இருந்த என்ஜின்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகளும், கேரளாவில் தமிழர்களின் கடைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 8 தமிழக மீனவர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக