ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சசி குடும்பத்தார் பெயரில் இருக்கும் தனது சொத்துக்களை எப்படி மீட்பது என்பதுதான் ஜெ.’வின் தற்போதைய தீராத சிந்தனை.



சசி தரப்பை மீண்டும் ஜெ.’ கார்டனுக்கு கூப்பிட்டுக்கொள்வாரோ என்ற யோசனையில்  ர.ர.க்கள் .
  மன்னார்குடி தரப்பால் பாதிக்கப்பட்ட பலரும் இப்போது தைரியம் பெற்று தங்கள் அனுபவங்களை கார்டனுக்கு கடிதம் கடிதமாய் எழுதிக் குவித்து வருகின்றனர். இந்த நிலையில் கார்டனின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்தும் சசி தரப்பின் மூவ்கள் குறித்தும் துருவத் தொடங்கினோம்.
மனநிலை :
முப்பது வருடங்களாக உடனிருந்த உயிர்த் தோழி சசிகலாவை வெளியேற்றி  தான் எடுத்த முடிவில் இருந்து அவர் கொஞ்சம்கூட மாறவில்லை. சசி உறவினர்கள் நடத்திய பல்வேறு லீலைகள் குறித்த புகார்களும் குமுறல்களும் ஜெ.’வின் மேஜை மீது வந்து குவிந்தபடியே இருக்கிறது. சொத்துக்கள் :
சசியோடு தான் பங்குதாரராக இருக்கும் சொத்துக்கள் குறித்தும் சசி உறவினர்கள் பெயரில் பினாமியாக பெருமளவில் வாங் கிப்போட்ட சொத்துக்கள் குறித்தும் தனது இனத்தைச் சேர்ந்த ஆடிட்டரோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் ஜெ. சசி குடும்பத்தார் பெயரில் இருக்கும் தனது சொத்துக்களை எப்படி மீட்பது என்பதுதான் ஜெ.’வின் தற்போதைய தீராத சிந்தனை.
ஜெ.’வின் கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா, இளவரசிக்கும் பங்குகள் இருக்கிறது. அந்த பங்குகளையெல்லாம் தனது பெயருக்கு மாற்று வதற்கான ஏற்பாடுகளையும் பரபரப்பாக முடுக்கிவிட்டிருக்கிறார் ஜெ. இதேபோல் பெரிய மதுபான நிறுவனமான மிடாஸ் டிஸ்டில்லரீ ஸின் முழு உரிமையும் சசி குடும்பத்தார் பெயரிலேயே இருக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் இட மதிப்பே 200 கோடி ரூபாய்க்கும் மேலாகிறது. அதோடு அதற்குள் இருக்கும் அதி நவீன கருவிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் லைசென்ஸ் வேல்யூ என்று கணக்கிட்டால் இவை 150 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும். ஆக ஏறத்தாழ 350 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மதுபான நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றினால், மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுமோ என யோசிக்கும் ஜெ., வேறு பினாமி பெயர்களில் மாற்றலாமா அல்லது சட்டச் சிக்கல் உண்டாகும் பட்சத்தில் சசி தரப்பிடமே கொஞ்சநாள் விட்டுவைக்கலாமா? இல்லையென்றால் யாரிடமாவது விற்றுவிடலாமா? என்றெல்லாம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். மாற்றம் :
எம்.ஜி.ஆர் நினைவு நாளான 24-ந் தேதி அவரது நினைவிடத்திற்கு ஜெ.’ போன போது திரண்டிருந்த ர.ரக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. கூட்டத்தோடு கூட்டமாய் சசியால் எம்.எல்.ஏ.வான ஒருவர் ஜெ.’வின் அருகே சென்று கும்பிடுபோட, இதைக் கண்ட ர.ர.க்கள் சிலர், "சசி கும்பல் நடிக்குது. நம்பாதீங்க'’என சத்தம் போட்டனர். இதை கவனித்த ஜெ.’ தொண்டர்கள் முழுக்க முழுக்க தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் புன்ன கைத்தார். அங்கிருந்து கார்டன் திரும்பிய ஜெ.’வின் கண்கள், வாசலில் கூடியிருந்த கூட்டத்தைத் துழாவத் தவறவில்லை. உள்ளே சென்ற ஜெ. வாசலில் கூட்டத்தோடு கூட்டமாய்க் காத்திருந்த புதுக்கோட்டை மாவட்ட கட்சி சீனியர் குழ.செல்லையாவை செக்யூரிட்டிகள் மூலம் உள்ளே அழைத்தார்.
பரவசமாக கார்டனுக்குள் நுழைந்த செல்லையாவிடம் ஜெ.‘"நீங்கள் வெளியில் நிற்பதைப் பார்த்தேன். அதனால்தான் கூப்பிட்டேன். எப்படி இருக்கீங்க?'’ என நலம் விசாரித்தார். அப்போது அந்த சீனியர், "அந்தக் கும்பல் எங்க முத்துராஜா சமூகத்தையே புறக்கணித்தது. இனி அப்படிப்பட்ட சங்க டங்கள் எங்களுக்கு இல்லை'’என்று சொல்ல.. ஜெ.’வோ, "நான் சாகறதுக்குள்ள எம்.ஜி. ஆரோடு இருந்த சீனியர்களை எல்லாம் ஒன்று சேர்க்கப்போறேன். கட்சியில் இருந்து விலகி நிற்கும் அப் படிப்பட்டவங்கக் கிட்ட நீங்க பேசுங்க. கட்சியை மேலும் வலிமையாக்கு வோம்'’என்று சொல்ல, அவரோ இதை மற்றவர் களிடம் சொல்ல பலரும் நம்ப முடியா மல் விவாதித்து வருகின்றனர்.
பொதுக்குழு :
30-ந் தேதி பொதுக் குழுவில் சசி தரப்பு நீக்கப் பட்டதை வரவேற்று கட்சி பிரமுகர்களை மனம் திறந்து பேச வைக்கலாமா? இது குறித்து ஒரு மகிழ்ச்சித் தீர்மானம் நிறைவேற்றலாமா? இல்லை சசி விவகாரம் ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை என்று காட்டும் விதமாய், பொதுக்குழுவில் இந்தப் பிரச்சினையையே ஒதுக்கித் தள்ளிவிடலாமா? என முதல்நாள் இரவுவரை பல்வேறு யோசனைகளில் இருந்தார் ஜெ. இது குறித்து சிலரிடம் விவாதிக்கவும் செய்தார். பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானத்தை முன்வைப்பது என்பது குறித்தும் ஆலோ சித்தார்.
சசி என்ன சொல்கிறார்?
உறவினர்கள் மன்னார்குடிக்குப் போய் வருவோம் என அழைத்தும் கூட "பிரியா வீட்டைவிட்டு எங்கும் போகாதே என்று சொல்லித்தானே அக்கா அனுப்பினாங்க. அதனால் என்னை எங்கும் கூப்பிடாதீர்கள்' என்றபடி இளவரசியின் மகள் பிரியாவின் வீட்டிலேயே இருக்கிறார் சசி. இப்போதும் சரிவர சாப்பிடாமல் கண்ணீரும் கம்பலையு மாகவே இருக்கிறார். உடல் பலவீனமாக இருப்பதால் சசியை மருத்துவர்கள் வந்து செக்கப் செய்தனர். இதற்கிடையே சசி தரப்பு, ஜெ.வை யாரைக் கொண்டு சமாதானப் படுத்தலாம் என யோ சித்து நரேந்திரமோடி யையும் சந்திரபாபு நாயுடுவையும் பல்வேறு வழிகளில் அணுகியது. எனினும் அவர்களிட மிருந்து பாஸிட்டிவான பதில்கள் கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு மூன்று நாட்களாய் சசிகலா ""அக்கா! என்னை எப்படியும் தன்னோடு கூப்பிட்டுக்குவாங்க. எந்த நேரத் திலும் அழைப்பு வரலாம். எத்தனைபேர் இருந்தாலும் என் னைப்போல் அக்காவை முழுதாகப் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. நான் மீண்டும் கார்ட னுக்குப் போனால் உறவுக் காரர்களான யாரையும் என்னோடு அழைத்துப்போக மாட்டேன். நான் பட்டதெல்லாம் போதும். நீங்கள் எல்லோரும் இப்படியே செட்டிலாகிவிடுங்கள். நான் கார்டனுக்குப் போவது உறுதி''’என தன் உறவினர்களிடம் நம்பிக்கையோடு சொல்லிக்கொண் டிருக்கிறார். கார்டனின் அதிரடி நடவடிக்கைக்கு முதல்நாள் இரவு வெளிநாடு போக இருந்த நடராஜன், கைது செய்யப்படலாம் என போலீஸ் அலர்ட் செய்ததால் அப்போது பயணத்தை நிறுத்திவிட்டார். தற்போது பாங்காங் சென்றிருக்கும் நடராஜன், சுமுக நிலையை ஏற்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
முழு நம்பிக்கையுடன் இருக்கிறது சசிகலா வட்டாரம். இந்த நம்பிக்கையை நிரந்தரமாக உடைப்பதற்கு விரைவில் சசிகலாவை தவிர்த்து மற்றவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாயலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.

-உமர் முக்தார்
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக