செவ்வாய், 15 நவம்பர், 2011

புத்தக கண்காட்சியும் ஜெயாவுக்கு பிடிக்காது

சென்னை புத்தகக்கண்காட்சி இல்லையா ? - எக்ஸ்க்ளூசிவ்


சரி பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என்று பல தேர்தலை பார்த்துவிட்ட நமக்கு இந்த தேர்தலையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று உள்ளே பேசாமல் போய் கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். பபாஸி தேர்தல் என்று ஒரு அறிவுப்பு கூட இல்லையே ஏன் ? காதும் காதும் வைத்த மாதிரி நடத்துறாங்க ?
மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு "நீங்க எந்த பதிப்பகம்?" என்றார். நைசாக அந்த கேள்வியை சாய்ஸுக்கு விட்டுவிட்டு தேர்தல் நடத்த அய்யர் மாதிரி யாராவது வருவாங்களா ? என்று பதில் கேள்வி கேட்டேன்.
"அட நீங்க வேற இந்த வருஷம் புக் ஃபேர் நடக்காதுன்றாங்க" என்றார்.
"என்ன நீங்க சொல்லுவது நிஜமா ?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் தடையில்லாமல் பேச ஆரம்பித்தார் .... "வழக்கமா புக் ஃபேர் நடத்துற இடத்தை வாடகைக்கு தரமாட்டேன்னு சொல்றாங்களாம். அதனால சிலர் இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி நடக்காதுன்னுதான் சொல்றாங்க வேற இடம் பார்த்தாலும் அது சரியா வராதுன்னு ஃபீல் பண்றாங்க இனிமே இடம் பார்த்து அரங்குகள் பிரிச்சு வாட்கை கொடுத்து வாங்கி
பந்தல் போட்டு, டாய்லட வசதி(?) செய்துகொடுத்து... வாய்ப்பே இல்லைன்றாங்க"

"அம்மாவோட எஃபெக்ட் ஏதாவது... ?

"அவங்களோட பங்களிப்பு இதுல இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் இருக்கு ஆனால் அம்மா இதுல எல்லாம் இண்ட்ரஸ்டா இருக்க வாய்ப்பே இல்லைன்னும் சொல்றாங்க"

"ஏங்க புத்தகக் கண்காட்சி நடக்கலைன்னா அப்ப எதுக்கு இந்த தேர்தல் ?"

"ஆமாங்க அது தான் இப்ப ஹாட் டாப்பிக். பபாசின்னு ஒண்ணு எதுக்கு இருக்கணும்னு பதிப்பாளர்களுக்குள்ள பேச்சு. இவங்க நடத்துற மதுரை புக் ஃபேர் கொஞ்சம் சுமார் திருச்சில நடத்துறதே இல்லை கோவைலயும் நடத்துறது இல்லை ஈரோடு மட்டும் ஓகே, அதுவும் தனிப்பட்ட ஒருத்தர் முயற்சியால"

"பபாசி புக் ஃபேர் நடத்தமுடியலைன்றது தன்மான தமிழனுக்கு எவ்வளவு கேவலம்!"
"ஏங்க நீங்க எந்த பதிப்பகம் ?"
"அதைவிடுங்க நீங்க கண்டினுயூ பண்ணுங்க"
"இப்ப பாருங்க இந்த வருடம் எலெக்‌ஷன் போன முறை (ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும்) கனஜோரா நடந்தது ஒரே நோட்டிஸ் மயம் அது இதுன்னு ஆடம்பரமா ஆனா இந்த தடவை ரொம்ப கமுக்கமா ரகசியமா நடக்குது. அதுவும் ஒரே டீம் ஆளுங்க ஜெயிச்சு வந்துட்டாங்க போன டீம்தான் இந்த தடவையும் தலைவர் நிக்க விரும்பாததால வேற ஒருத்தர் தலைவர் ஆனா இத்தனை நடந்தும் என்ன புண்னியம்! சென்னை புக் ஃபேர் நடக்கலைன்னா இவங்க எல்லாருமே வேஸ்ட்னு அர்த்தம்"

"கலைஞர் ஆட்சியாக இருந்தால் இது நடந்திருக்காது இல்லையா ?"

"கருணாநிதி ஆட்சில இருந்தப்ப அவருக்கு ரொம்ப ஜால்ரா போட்டுட்டாங்க கிட்டத்தட்ட அவங்க எம் எல் ஏ மாதிரி கை கட்டி வாய் பொத்திதான் நின்னாங்க அவர்கிட்ட இப்ப இந்த அம்மா ஜெயிச்சதும் இந்த பபாஸிக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அவரை எதாவது செண்டிமெண்ட்டா பேசி ஏமாத்திடலாம் இந்த அம்மாகிட்ட அதுவும் நடக்காதுன்னு கலங்கி போய் இருக்காங்க.

"ஆமாம் அண்ணா நூலகத்தையே மாத்திட்டாங்க"

"பொதுவா கலைஞர் ஆட்சில நூலக ஆர்டர் வரும், இந்த அம்மா ஆட்சில வராதது தான் வரலாறு ஆனா என்னமோ தெரியலை, கருணாநிதி ஆட்சியிலயும் இந்த தட்வை கடந்த 2 வருஷமா ஆர்டரே வல்லை இனிமே இந்தம்மா வந்தா தரப்போகுது, அதுலயும் இந்த பபாஸி கருணாநிதிக்கு அந்த ஜால்ரா அடிச்சப்புறம் இந்தம்மா எப்படி ஆர்டர் தரும்னு ஒரே கவலை எல்லாத்துக்கும். அதுலயும் சிலருக்கு சந்தோஷம். ஏன்னா கருணாநிந்தியோட ஆசியோட பலர் பலவிதமா அநியாயமா ஆர்டர் வாங்கினாங்க. இப்ப அவங்களுக்கும் கிடைக்காதுன்னு பலர் சந்தோஷபப்டறாங்க.

"சரி நீங்க எந்த பதிப்பகம் ? "
"நீங்க எந்த பதிப்பகம் என்று சொல்லுங்க" என்று நான் எதிர் கேள்வி கேட்க அவர் உடனே ஓடிவிட்டார்.
"எங்கே இவ்வளவு அவசரமா ஓடறீங்க ..."
"விஷயமே தெரியாதா வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ண..." என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக