செவ்வாய், 1 நவம்பர், 2011

இளையராஜாவின் மனைவி மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் அஞ்சலி


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் இருந்த ஜீவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஜீவாவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜீவா மரணம் அடைந்தபோது, இளையராஜா சென்னையில் இல்லை. ஐதராபாத் சென்றிருந்தார். ஜீவா இறந்தது குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா ஜீவா தம்பதிக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக