செவ்வாய், 1 நவம்பர், 2011

நவாப் பட்டம் நடிகர் சைப் அலிகான்...!பொறுப்பேற்றார்.

Saif takes over as 10th Nawab of Pataudi
பட்டோடி குடும்பத்தின் 10வது நவாப்பாக, பாலிவுட் நடிகர் சைப் அலிகான் இன்று(31.10.11) பொறுப்பேற்றார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைப் அலிகான். இவர் பட்டோடி குடும்பத்தை சேர்ந்தவர். மன்னராட்சி காலம் முதலே, பட்டோடி குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசுக்கு நவாப் எனும் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். இதுநாள் வரை நவாப்பாக, சைப்பின் அப்பாவும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானுமான மன்சூர் அலிகான் பட்டோடி இருந்து வந்தார். சமீபத்தில் பட்டோடி காலமானார். இதனையடுத்து புதிய நவாப்பாக பட்டோடியின் வாரிசான சைப் அலிகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டோடி மாளிகையில் இன்று நடந்த இவ்விழாவில், 52 கிராமத்தை சேர்ந்தவர்கள் முன்னிலையில், 10வது நவாப்பாக சைப் இன்று(31.10.11) பொறுப்பேற்று கொண்டார். இந்தவிழாவில் சைப்பின் குடும்பத்தார், பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நவாப்பாக பொறுப்பேற்றாலும், எனது பெயருக்கு முன்னால் அந்த பட்டத்தை உபயோகிக்க மாட்டேன் என்றும்,  அதற்கு தகுதியான ஒரே நபர் எனது அப்பா மன்சூர் அலிகான் பட்டோடி தான் என்று கூறியுள்ளார் சைப்.

பாலிவுட் நடிகர் ஒருவர் நவாப்பாவது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக