வெள்ளி, 18 நவம்பர், 2011

பிக்பாஸ் 5 வீட்டில் ஆபாச நடிகை சன்னி லியோன்


பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ நடக்கும் வீட்டில் சூட்டைக் கிளப்ப வருகிறார் ஆபாசப் படங்களில் நடிக்கும் இந்திய வம்சாவழி நடிகை சன்னி லியோன் (அ) கேரன் மல்ஹோத்ரா.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் லேட்டஸ்டாக கலந்து கொண்டவர் சாமி அக்னிவேஷ். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சிக்கு மேலும் சூட்டைக் கொடுப்பதற்காக ஒரு புது ஐட்டத்தை களம் இறக்குகின்றனர். இந்திய-கனடிய பெற்றோருக்குப் பிறந்தவர் சன்னி லியோன் (அ) கேரன் மல்ஹோத்ரா. அவர் ஆபாச படங்களில் நடிப்பவர். தற்போது அவர் தான் பிக் பாஸ் 5 வீட்டிற்கு வரவிருக்கும் லேட்டஸ்ட் விருந்தாளி.

கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் ஷோவிற்கு பாப் பாடகி பமீலா ஆண்டர்சன் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். இந்நிலையில் அந்த இடத்தை இந்த ஆண்டு சன்னி நிரப்புவார் எனத் தெரிகிறது. இந்த வார இறுதியில் வருவார் என்று கூறப்படுகிறது.

முதலில் இந்த ஷோவுக்கு குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் வரவிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் சன்னி தான் தேர்வாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் அக்ஷதீப் சாய்கல், சித்தார்த் என்னும் 2 திருமணமாகாத ஆண்களும், அமர் உபத்யாய் என்ற திருமணமானவரும் உள்ள நிலையில் சன்னி வருவது நல்ல பொழுதுபோக்காக (யாருக்கு?)அமையும் என்று கூறப்படுகிறது.

சன்னி 2003ம் ஆண்டில் பென்ட்ஹவுஸ் பெட் ஆப் தி இயர் ஆகத் தேர்வானார். 2010ல் முதல் 12 எக்ஸ் ரேடட் பெண்களில் ஒருவராகத் தேர்வானார். 'அந்த' மாதிரி படங்களில் நடிக்கும் நடிகைகளில் மிகவும் அழகானவர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக