வெள்ளி, 18 நவம்பர், 2011

உலகின் மிக மலிவான கம்ப்யூட்டர் ஆகாஷ், வாங்குவதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு!


புதுடெல்லி : உலகிலேயே மிகவும் விலை குறைவான மினி கம்ப்யூட்டர் (டேப்லெட்) அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இதை வாங்குவதற்கு இது வரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், மலிவான விலையில் Ôஆகாஷ்Õ என்ற பெயரில் மினி கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது. இந்திய அரசு, தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மினி கம்ப்யூட்டர்களை ஸி2,250க்கு வழங்கி உள்ளது. ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரிகள், பிட்ஸ் பிலானி, டெரி யுனிவர்சிட்டி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர சில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Ôஆகாஷ்’ மினி கம்ப்யூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ‘இதுவரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதனுடன் மாதம் ரூ.99 விலையில் டேட்டா பிளான் வழங்குவதற்கான நிறுவனத்தையும் தேர்வு செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக இன்டர்நெட் வசதி செய்து தரப்படும். 700 எம்பி பைலை 25 எம்பி பைலாக சுருக்கி சேமிக்கும் தொழில்நுட்பம் இதில் இருக்கும்Õ என டேட்டாவிண்ட் தலைமை செயல் அதிகாரி சுனீத் சிங் துலி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக