வெள்ளி, 18 நவம்பர், 2011

பிளாக்கில் நிர்வாணப் படம் வெளியிட்ட எகிப்து மாணவி: மக்கள் கொதிப்பு


கெய்ரோ: எகிப்தைச் சேந்த கல்லூரி மாணவி ஆலியா மக்தா எல்மஹ்தி, தனது நாட்டில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் எகிப்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது ப்ளாக் விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
www.arebelsdiary.blogspot.com
எகிப்தைச் சேர்ந்தவர் ஆலியா மக்தா எல்மஹ்தி (20). பல்கலைக்கழக மாணவி. எகிப்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான லிபரல்ஸ் மற்றும் கன்சர்வேட்டிவ்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எகிப்தில் முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிந்து தான் வெளியே செல்வார்கள். அப்படி இருக்கையில் ஆலியா நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளது முஸ்லிம் மதக் கொள்கையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது.
ஆலியாவின் இந்த செயல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எகிப்தில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது கூட தவறு.

இந்த புகைப்படங்கள் வன்முறை, இனவெறி, பாலியல் வன்முறைகள், பாசாங்கு நிறைந்த சதமுதாயத்திற்கு எதிரான குரல் என்று கூறியுள்ளார் ஆலியா. இந்த வாரத் துவக்கத்தில் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில் இருந்து இது வரை 1.5 மில்லியன் தடவை அந்த புகைப்படங்களை இணையதள பயனீட்டாளர்கள் பார்த்துள்ளனர்.
எகிப்தில் அடுத்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதில் இஸ்லாமியர்களுக்கும், லிபரல்ஸுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்த நிர்வாணப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. லிபரல்ஸ் ஆட்சிக்கு வந்தால் எகிப்தை சீரழித்துவிடுவார்கள் என்று சலாபி என்னும் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆலியா, முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக்கிற்கு எதிராக புரட்சி நடத்திய லிபரல் அமைப்பான ஏப்ரல் 6 இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று செய்தி வெளியானது. ஆனால் இதை அந்த இயக்கம் மறுத்துள்ளது. நாங்கள் பண்பாட்டை மதிப்பவர்கள். அப்படி இருக்கையில் இப்படி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை பிளாக்கில் வெளியிட்டுள்ள பெண் எப்படி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக