வெள்ளி, 18 நவம்பர், 2011

விஜய் மல்லையா அசத்தும், “பெயர் குறிப்பிடாத நபர் தரும் ரூ1250 கோடி!”

Viruvirupu

: Vijay Mallya confirmed his company is nearing for a 370 million Dollar deal, with an Indian private investor and a group of banks. He did not name the banks. But, it’s understood 14 banks led by State Bank of India is the group, he is talking about. Also, he did not say the Indian private investor’s name.
மிகமிக அவசர பணத் தேவையில் உள்ள கிங்ஃ.பிஷர் ஏர்லைன்சுக்கு, சுமார் 370 மில்லியன் டாலர் பணம் இன்னமும் ஓரிரு தினங்களில் வந்து சேரும் என்று தெரிவித்துள்ள கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, இதில் 118 மில்லிடன் டாலர் தொகை, 14 பேங்குகளிடமிருந்து கடனாக கிடைக்க உள்ளது என்கிறார்.
மிகுதி 250 மில்லியன் டாலர், பெயர் வெளியிட விரும்பாத பணக்கார இந்தியர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் போகின்றது என்கிறார் மல்லையா! இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 1,250 கோடி ருபா!

பணம் கொடுக்கப்போகும் பேங்குகளின் பெயர்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார். பணம் கொடுக்கப்போகும் 14 வங்கிகளும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தலைமையில் இணைந்துள்ளன என்ற விபரம் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பெயர் வெளியிட விரும்பாத இந்தியர்’ வெளிநாட்டில் வசிப்பவரா அல்லது இந்தியாவில் இருக்கிறாரா என்பதையும் வெளியிடவில்லை.
இரு தினங்களுக்கு முன்னர், செப்டெம்பருடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், கிங்ஃபிஷரின் நஷ்டம் இருமடங்காகி உள்ளது என்ற தகவலை விஜய் மல்லையா தெரிவித்திருந்தார். ஆனால், அது பற்றிய கணக்கு எதையும் அவர் இன்னமும் வெளியிடவில்லை.
அப்படியான நிதி நிலைமையில் உள்ள நிறுவனத்தில் 1,250 கோடி ருபா பணத்தை முதலீடு செய்ய தயாராக உள்ள ‘பெயர் வெளியிட விரும்பாத இந்தியர்’ யார் என்பதில் பலவித ஊகங்கள் இன்று பிசினஸ் வட்டாரங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன. அத்துடன், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய வைக்க இந்த நபருக்கு விஜய் மல்லையா காட்டப்போகும் ஆப்பிள் எது என்பதிலும் பலவித ஊகங்கள் அடிபடுகின்றன.
இன்னும் ஓரிரு தினங்களில் ‘பெயர் வெளியிட விரும்பாத இந்தியரின்’ பெயரும், அவருக்கு காட்டப்பட்டுள்ள ஆப்பிள் எது என்பதும் தெரிந்துவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக