செவ்வாய், 15 நவம்பர், 2011

‘ஆயிரத்தில் ஒருவன்’ 2- ம் பாகம்

12ம் நூற்றாண்டு சோழர் கால வரலாற்றை பின்னணியாக வைத்து செல்வராகவன் இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதன் ஷூட்டிங் சுமார் 2 வருடம் நடந்தது. இதன் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன்.
இதுபற்றி அவர், ‘‘ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. கடந்த 2 நாட்களாக அதை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டேன்.
விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முதல்பாகம் வெளியானபோது இப்படம் பற்றி விமர்சனங்கள் எழுந்தன.
அதில் இருந்த குறைகளை போக்கும்விதமாக 2ம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார்.
முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சி முடியும்போதே 2ம் பாகத்துக்கான தொடக்கத்தை அறிவிக்கும்விதமாக முடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எத்தனை பாகங்கள் எடுத்தாலும் எத்தனை தொழில் நுட்பங்கள் அசிங்க அழகிகளை வைத்து எடுத்தாலும் ,பொன்மனச்செம்மலின் ஆயிரத்தில் ஒருவனுக்கு கிட்டவும் நெருங்க முடியாது அது படம் நீங்கள் எடுப்பது பப்படம். எம் ஜி ஆர் படப்பெயர்களை வைத்து அவரின் புகழுக்குரிய தலைப்புகளை நாறடிக்கா வரைக்கும் நன்றிகள்.தயவு செய்து எம் ஜி ஆர் இரசிகர்கள் தட்டி கேளுங்கள் ,பிரபு தன் தந்தையின் வெற்றிப்படமான "தெய்வமகன்" படப்பெயரை வைக்க விக்ரமுக்கு அனுமதி அளிக்காதது போல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக