செவ்வாய், 11 அக்டோபர், 2011

TNA அமெரிக்காவுக்கு பயணமாகிறது


அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அவசரமாக வோஷிங்டனுக்கு செல்லவுள்ளது.எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போது நடத்தப்பட்டுவரும் தீர்வுப்பேச்சுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.
அதேசமயம் கட்சித் தலைவர் என்ற ரீதியில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் சந்தித்து இலங்கையில் தமிழர் அரசியல் பற்றி கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்வுப்பேச்சுக்களில் கூடுதல் அக்கறை செலுத்திவரும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த பேச்சுக்களின் முன்னேற்றம், தாற்பரியம் குறித்து அவ்வப்போது தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெளிவுபடுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த அமெரிக்க விஜயமும் அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக கடந்தமாதம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட்ஓபிளேக் தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது தமிழர் பிரச்சினை குறித்து அவ்வப்போது அமெரிக்காவை அறிவுறுத்துமாறு வினயமாக வேண்டியிருந்ததாகவும், அதன் ஓர் அம்சமாகவே கூட்டமைப்பு அங்கு சென்று நிலைமைகளை விளக்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும்
கூறப்படுகிறது.
அதேவேளை அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் (புலி)கூடட்டமைப்பினர் அங்கிருந்து கனடா சென்று கனேடிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் சந்திப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாயை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுப் பேச்சுகள் குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. (புலி)கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் இதன்போது கவனமாகக் கேட்டு அறிந்து கொண்டதாகத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக