செவ்வாய், 11 அக்டோபர், 2011

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சீருடையுடன் கடமையாற்ற வேண்டும்!

அமைச்சர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுகின்ற அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சீருடையுடன் கடமையாற்ற வேண்டும் என பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
அமைச்சர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் ஆயுதங்களுடன் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக