ஞாயிறு, 2 அக்டோபர், 2011

அரசு-T.N.A.பேச்சுவார்த்தை சம்பந்தன், ஸ்ரீதரன், சுமந்திரன் மாறுபட்ட கருத்துக்கள்!

அரசு-T.N.A.பேச்சுவார்த்தை குறித்து (புலி) கூட்டமைப்பு தலைவர்களிடையே முரண்பாடான நிலைப்பாடு: சம்பந்தன், ஸ்ரீதரன், சுமந்திரன் மாறுபட்ட கருத்துக்கள்!

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து மூன்று வெவ்வேறு விதமான நிலைப்பாடுகள் கூட்டமைப்புத் தரப்பிலிருந்தே வெளி யாகியிருப்பதை தமிழ் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காது என்றும், ஓரளவு நம்பிக்கை இருக்கிறது என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்றும் கூட்டமைப்பின் வெவ்வேறு தலைவர்கள் வெளியிட்ட நிலைப்பாடுகள் வெவ்வேறு தமிழ் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன.

அரசாங்கத்துக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு கிடைக்காது என்று கூட்ட மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்திருப்பதாக ஒரு பத்திரிகை தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத் திடமிருந்து தீர்வு எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற தொனிப்பட ஸ்ரீதரன் தெரிவித்திருப்பதாக இந்தச் செய்தி கூறியுள்ளது.எனினும் தீர்வைக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் மனமில்லாமல் தான் இருக்கிறது என்றும், எனினும், இலங்கை அரசாங்கத்திடம் ஒரு மாற்றம் தெரிகிறது என்றும், கூட்டமைப்பின் நியமன பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கூறியிருப்பதாக மற்றுமொரு தமிழ்ப் பத்திரிகை தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பேசிப் பேசி காலத்தை இழுத்தடிக்க முடியாது என்று ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது. அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்காது என்று நான் சொல்லமாட்டேன். ஒரு தீர்வைக் கொடுப்பதற்கு அரசுக்கு இன்னமும் மனமில்லாமல் இருக்கிறது’ என்று சுமந்திரனை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பேச்சுவார்த்தை மூலமே தீர்வொன்றை எட்ட முடியும் என்று, கூட்ட மைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருப்பதாக மற்றுமொரு பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

சில தீய சக்திகள் திட்டமிட்டு அரசாங் கத்துக்கும், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப் புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சம்பந்தன் குற்றஞ்சாட்டி யிருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மூன்று நிலைப்பாடுகளுமே, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இதில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பது குறித்த குழப் பத்தை வெளிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் போது 13 வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு குறித்து பரிசீலிப்பது என்று இரண்டு தரப்பும் இணக்கம் கண்டிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

கூடவே, இனி தீர்வு எட்டப்படும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்று கூட்ட மைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

13 தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் அதற்கும் அப்பால் சென்று தீர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை, இந்திய அரசாங்கம் அரச ஆதரவு தமிழ்க் கட்சிகள், அமெரிக்கா என்று எல்லோருமே வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டமைப் பும், அரசாங்கமும் கூட இந்த இணக்கத்துக்கு வந்திருப்பது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தீர்வுக்கான ஒரு அடிப்படை குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருப் பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இது பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டமைப்பு தரப்பிலிருந்தே மாறுபட்ட நிலைப்பாடுகள் வெளிவருமாக இருந்தால், அது மக்களை இன்னமும் குழப்புவதாகவே அமையும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக