ஞாயிறு, 2 அக்டோபர், 2011

புலிகளின் யுத்த இயந்திரம் நெதர்லாந்தில் இயங்குகிறது – வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) யுத்த இயந்திரம் நெதர்லாந்தில் இயங்குகிறது – வழக்கு தொடுனர்களின் குற்றச்சாட்டு
நெதர்லாந்தில் உள்ள தமிழ் சமூகம் (9,000 முதல் 13,000 வரையான ஆண்கள்) ஸ்ரீலங்காவில் வன்முறை மோதல்களில் ஈடுபட்ட தமிழ் புலிகளுடன் பெருமளவில் இணைக்கப் பட்டிருக்கிறது. மிரட்டிப் பணம் பெறுதல்,மற்றும் தேசத்துரோகம் போன்றவற்றினூடாக ஒரு வித பயங்கலந்த சூழ்நிலை டச்சுத் தமிழர்களிடையே நிலவி வருகிறது.
இதுதான், 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நெதர்லாந்தில் வசிக்கும் ஐந்து தமிழர்களுக்கு எதிராக ஹேக் நீதிமன்றத்தில் நேற்று(29.09.2011) நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசாங்க தரப்பு வழக்குத் தொடுனர்களான வாட் பேர்டினன்டாஸ் மற்றும் மார்ட் நியுவெனாஸ் ஆகியோரின் வாதங்களாகவிருந்தது.
இவர்களின் வாதம் சந்தேக நபர்கள் ஸ்ரீலங்காவின் தமிழ் புலிகளுக்கு வேண்டி நெதர்லாந்தில் ஒரு தளத்தை இயக்கி வந்தார்கள் என்பதே. மேலும் வழக்குத் தொடுனர்கள் காண்பித்தது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்,மேற்பார்வையிட்டு வந்தது, கலவரம், குண்டுத் தாக்குதல், கொலை, மனித வதம், மற்றும் மோசமான தாக்குதல் போன்றவற்றைப் புரிந்து வந்த ஒரு சர்வதேச குற்றவியல் மற்றும் பயங்கரவாத  அமைப்பினையே.
பிரதான சந்தேகநபரான 52 வயதுடைய சாகென்னை வதிவிடமாகக் கொண்ட எஸ். இராமச்சந்திரன் என்பவர்தான் எல்.ரீ.ரீ.ஈ யினரது சர்வதேச கணக்காளர் என்று வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். இவர் தனியார் விரைவு அஞ்சல் (கூரியர் சேவை)வழியாக உலகம் முழுவதும் பணத்தை அனுப்பி புலிகள் ஆயுதக் கொள்வனவு செய்ய உதவியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறார். அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் இவரது குற்றத்துக்காக 16 வருட சிறைத் தண்டனை விதிக்கக் கோருகிறார்கள். மற்றைய  மூன்று டச்சுத் தமிழ் புலிகளுக்கு பத்து வருட சிறைத் தண்டனை விதிக்கும்படி கோரியுள்ளார்கள். அதேபோலவே டச்சுக் கிளையின் தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள த ஹேக்கை வசிப்பிடமாகக் கொண்ட 46 வயதான ஆர்.சிறீரங்கம் என்பவருக்கும் தண்டனை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.
1983லிருந்தே தமிழ் புலிகள் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் சுதந்திரமான ஒரு தனிநாட்டின் கட்டுப்பாட்டுக்கு வேண்டி ஸ்ரீலங்கா இராணுவத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் தொடர்ச்சியாக பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கியும் மற்றும் அவர்கள் தற்கொலை குண்டுதாரிகளையும், மற்றும் சிறுவர் போராளிகளையும் பயன்படுத்தி வந்ததால், ஐரோப்பிய ஒன்றியம் அந்த இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் புலிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டார்கள்.    “ஆனால் இங்கு ஐரோப்பாவில் எல்.ரீ.ரீ.ஈ   உயிருடன் நன்றாகவுள்ளது”என்றார் பேர்டினன்ஸ்.
அவர் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று வர்ணித்தது, “நெதர்லாந்தில் உள்ள தமிழ் பிள்ளைகள் அவர்களது சிறு வயது முதற்கொண்டே எல்.ரீ.ரீ.ஈ யினரது வன்முறைச் சித்தாந்தத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகிறார்கள். நெதர்லாந்தில் புலிகளுக்கு சுமார் 20வகுப்பறைகள் வரை உள்ளன, அங்கு  வார இறுதி நாட்களின்போது சிறுபிள்ளைகள்மீது பிரச்சாரங்கள் பொழியப்பட்டு வருகின்றன. அவர்கள் குண்டுகளையும் மற்றும் கையெறி குண்டுகளையும் பற்றி படங்கள்கூட வரைகிறார்கள்.” சிறுபிராயந் தொட்டே அவர்களிடம் அவர்களது எதிர்காலம் இங்கே நெதர்லாந்தில் தங்கியிருக்கவில்லை,ஆனால் அது தங்கியிருப்பது சுதந்திரமான தமிழ் தேசத்தில்தான் என்று சொல்லப்பட்டு வருகிறது, அத்தோடு தற்கொலை குண்டுதாரிகள்தான் வீரர்கள் என்றும் சொல்லப்படுகிறது”
டச்சு வழக்குத் தொடுனர்களின் கூற்றுப்படி, 8,500 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருந்து தமிழ் புலிகள் மோதலுக்கு நிதி திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். நெதர்லாந்தில் அவர்கள், தமிழ் இளையோர் அமைப்பு, மற்றும் டச்சு தமிழ் கலை மற்றும் கலாச்சார அமைப்பு போன்ற அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். அவைகள் மாநகர அங்கங்கள் வழங்கும் உதவித் தொகைகளையும் பெறுகின்றன. வழக்குத் தொடுனர்களின் வாதப்படி அந்தப் பணம்தான் யுத்த இயந்திரத்துக்கு எண்ணெயிட உதவுகிறது. உதாரணமாக அவர்கள் கண்டறிந்தது, சியஸ்ட்டிலிலுள்ள ஒரு மாநகரசபை தமிழர்களின் ஒரு விளையாட்டுத் தினத்துக்காக 2.000 ஈரோக்கள் வரை நிதியுதவி செய்துள்ளது. அந்தப் பணம் எல்.ரீ.ரீ.ஈ யினைப் போயடைவதில்தான் முடிவடைந்ததுள்ளது.
சந்தேக நபர்கள் நெதர்லாந்திலுள்ள தமிழர்களிடம் யுத்த வரியினை அறவிட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அதைச் செலுத்த முடியாவிட்டால், ஸ்ரீலங்காவிலுள்ள அவர்களது குடும்பத்தினருக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இவர்களாலும் அவர்களைப் பார்க்க தீவுக்கு செல்ல முடியாமலிருந்தது.
சந்தேக நபர்கள் விருப்பு வெறுப்பற்ற ஞ}னிகளைப்போல தமக்கு எதிராக வாசிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவதானித்த வண்ணமிருந்தனர், நேற்று முழுவதும் இது நடைபெற்றது. 1985முதலே நெதர்லாந்தில் வசித்துவரும் இராமச்சந்திரன் வழக்கு விசாரணயின்போது கைகளிரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியபடி சலனமற்று அமர்ந்திருந்தார். நீதிமன்ற அறையில் அரசதரப்பு வழக்கறிஞர்கள் ஒரு திரையில் காண்பித்த உருவங்களைப் பார்ப்பதற்கு மட்டும் ஒரு கணம் தனது பார்வையை செலுத்தினார். மற்ற விடயங்களுக்கு மத்தியில் அவர்கள் ஸ்ரீலங்காவில் தமிழர் சிறுவர் போராளிகள் அணிவகுப்பு நடத்துவதின் பதிவு செய்யப்பட்ட காட்சியையும், மறைந்த ஒரு தோழரின் நினைவாக 2007ல் சந்தேக நபர் சிறீரங்கம் நிகழ்த்தும் ஒரு அனல்தெறிக்கும் உரையையும் ,மற்றும் இராமச்சந்திரன் ஸ்ரீலங்காவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ நிறுவனர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தையும்  திரையில் சித்தரித்துக் காட்டினார்கள்.
அரசதரப்பு வழக்கறிஞர்கள் கூறியது, நீதிமன்றில் காணும் பிரதிவாதியின் மனோபாவம் அவருக்கு எதிராகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நன்கு பொருந்துகிறது என்று.  பேர்டினன்ஸ் தெரிவித்தது, பிரதிவாதிகள் குற்றத்தைக் குறித்த வருத்தமோ அல்லது தண்டனைக்குரிய அவர்களது செயல்களைக் குறித்த எந்தவிதமான கருத்தையோ தெரிவிக்காமலுள்ளார்கள் என்று. அதை அவர் இவ்வாறு தெரிவித்தார், ”ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீத சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்மீது விரல் நீட்டும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அவர்களது சொந்தக் குற்றங்களில் எந்தவித சுய பிரதிபலிப்பும் இல்லாதிருக்கிறார்கள்” என்று.
சந்தேக நபர்கள் மீண்டும் குற்றம் புரியக்கூடும் என்று சந்தேகம் உள்ளதால் அரசாங்க வழக்குத் தொடுனர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனையைத் தேடுகிறார்கள்.” சந்தேக நபர்களின் மன உணர்வுகள்,கருத்தியல்கள்,மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கான பிடிவாத குணம் என்பனவற்றைக் காணும்போதும் மற்றும் முற்றிலும் குற்ற உணர்வில்லாத அவர்களின் தன்மையை அவதானிக்கும்போதும், அவர்கள் திரும்பவும் இதை செய்வார்களோ என நாங்கள் அச்சப்பட வேண்டியுள்ளது” இவ்வாறு நெதர்லாந்து வானொலி தனது செய்தியில் கூறியுள்ளது.
தமிழில்:எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக