ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தேர்தலில் புலம்பெயர் புலிகளின் புலிகளின் நிதி!-சிவாச்சாரியார் சந்தேகம்?

சேரிப்புற வாக்குகளை அபகரிக்க பொய் வாக்குறுதி தேர்தலில் புலம்பெயர் புலிகளின் புலிகளின் நிதி!-சிவாச்சாரியார் சந்தேகம்?

ஏணியாக இருப்போம் என்று மார்தட்டும் வேட்பாளர்கள் கொழும்பு மாநகர சபை தேர்தலில் அப்பாவி சேரிப்புற வாக்குகளை அபகரிக்க சமய, சமூக நிறுவனங்களுக்கு, பெரும் நிதித்திட்டங்களுக்கு நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியானது புலம்பெயர் புலிகளின் நிதியா? பாதுகாப்பு புலனாய் வுத்துறை மற்றும் அரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச இந்துமத பீடத் தலைவர் “தேசபந்து” சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும், மார்தட்டும் இனத்து வேஷ அரசியல் நடிப்பையும் காட்டும் ஜனநாயகத்தையும் தமிழர்களையும் காப் பாற்றிவருவது நாமே என்று வீரவேசம் வேசம். பேசிவரும் சிலர் இம்முறை கொழு ம்பு மாநகர சபைத் தேர்தலில் சேரிப்புறங் ளிலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு சமய சமூக மேம்பாட்டிற்கும் அவை சார்ந்த விடயங்களுக்கும் பெருந் தொகை நிதியை நாம் வழங்குவோம் என்று போலியான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.

புலம்பெயர் புலிகளின் நிதிகள் ஏதேனும் இவற்றிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட் டுள்ளதா என்று தேர்தல்கள் ஆணையமும், பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறையும் உடன் கவனம் செலுத்தி தெளிபுபடுத்த வேண்டும். இத்தகைய உதவிகள் செய் வதற்கு இத் தேர்தல் நேரம் இவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாக்குறுதி அளிப்பது சட்டபூர்வமான கொழும்பு மாநகர நிதியிலிருந்து வழங்கக்கூடியதல்ல. அப் படியானால் இத்திட்டத்திற்கான நிதி எங்கிருந்து, எதற்கான கூலியாக வழங்கப் படுகிறது என்ற சந்தேகம் உள்ளது. இவ்விட யத்தில் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சர்வதேச இந்துமத பீட தலைவரும், ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளருமான தேசபந்து, சிவாகம கிரியா பூசணம் சிவஸ்ரீ பால ரவிசங்கரக் குருக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு எல்லாம் வாய்பொத்தி மெளனிகளாக சமூக வழி காட்டிகளான இந்துமத குருமார் பார்த்துக் கொண்டிருந்த தன் பயன்தான் இன்று நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது. எனவே சமூக, சமய அரசியல் விழிப்பு ணர்வையும் இத்தகைய அரசியல் நடிகர் திலகங்களின் முகத்திரையையும் மக்கள் முன்னிருத்தி அடையாளம் காட்ட வேண்டியதும் நமது கடமையே. இவ்வாறு சிவாச்சாரியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக