செவ்வாய், 18 அக்டோபர், 2011

India கார் விற்பனை மந்தம் பழைய கார்களை அளிக்க வேண்டுமாம்


Car Scrappage
15ஆண்டுகளை கடந்த கார்களை அழிக்கும் விதத்தில் புதிய சட்டம் கொண்டு வருமாறு, மத்திய அரசுக்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி, சலுகைகளை வாரி வழங்கியும் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு சூடுபிடிக்கவில்லை.
இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 15 ஆண்டுகளை கடந்த கார்களை அழிக்கும் வகையில் புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சியாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கார் விற்பனை மந்தம் பழைய கார்களை அளிக்க வேண்டுமாம்

மேலும், புதிய கார்களைவிட பழைய கார்கள் அதிக கார்பன் புகையை வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகவும், எனவே இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வருவது அவசியம் என்றும் சியாம் கோரியுள்ளது.

கார்கள் தவிர, 15 ஆண்டுகளை கடந்த தனியார் வாகனங்கள், வர்த்தக ரீதியிலான வாகனங்கள், இருசக்கர வாகனங்களையும் அழிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்த இந்த திட்டத்தால் அங்கு கார் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் சியாம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கார்களை அழித்து புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசுகள் 2,000 யூரோ பணச்சலுகை வழங்குகின்றன.

இதேபோன்று, இந்தியாவிலும் புதிய சட்டம் கொண்டு வரும்போது, புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பணச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக