வெள்ளி, 14 அக்டோபர், 2011

"நீதிமன்றில் சந்திக்கிறேன்" சம்பந்தனுக்கு சங்கரி சவால்!

நீதிமன்ற உத்தரவை மீறி தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார். 
சம்பந்தன் பழையவற்றை மறந்து பேசுகிறார்



தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதியாகச் செல்லுபடியற்றது என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஆணையாளருக்கு அனுப்பி அவர் வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், நல்லூரில் இடம்பெற்ற மாநாடு, கட்சி தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதுடன் சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நானே. நீதிமன்றத் தீர்ப்புப்படி நான் அழைப்பு விடுக்காமல் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தையோ மாநாட்டையோ நடத்த முடியாது" என சம்பந்தன் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் சம்பந்தனின் கருத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள வீ,ஆனந்த சங்கரி சம்பந்தன் பழையவற்றை மறந்து பேசுகிறார். அவரை நான் நீதிமன்றில் சந்திக்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.
வீ.ஆனந்த சங்கரி சவால் விடுத்து அத தெரண தமிழிணையத்திற்கு வழங்கிய செவ்வியை மேலுள்ள காணொளியில் காண்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக