வெள்ளி, 14 அக்டோபர், 2011

தொலைபேசி இலக்கங்களை சுவிஸ் இலங்கைக்கு வழங்கியுள்ளது

புலிகளின் வலையப்பின் முகவர்கள் - அவர்களது தொலைபேசி இலக்கங்களை சுவிஸ் இலங்கைக்கு வழங்கியுள்ளது - திவயின!

சுவிஸர்லாந்தில் உள்ள புலிகளின் வலையப்பின் 235 கொழும்பு முகவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமின்றி, புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தமுள்ள தொலைபேசி நிலையங்கள் குறித்த தகவல்களை சுவிஸ் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.சுவிஸர்லாந்து அரசாங்கத்தின் வழக்கு விவகாரங்களுக்கான பணிப்பாளர் பெற்ரிக் லாமோனின் உத்தரவின் பேரில், இந்த ரகசிய தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் புலிகள் ஆயுத வலையமைப்பு மற்றும் கொழும்பில் இருந்து இயங்கும் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ரகசிய திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

முதல் முறையாக சுவிஸ் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள இந்த தகவல்கள் காரணமாக சுவிஸர்லாந்தில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர் எனவும் திவயின கூறியுள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள இந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், கொழும்பில் உள்ள புலிகளின் முகவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக