சனி, 15 அக்டோபர், 2011

விருப்பு வாக்கு தேர்தல் முறை விரைவில் மாற்றப்படும்

ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் எதிர் காலத்தில் நடக்கும் சகல தேர்தல்களிலும் மாபெ ரும் வெற்றியை அடைய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த தேர்தல் முறையை மாற்றியமைத்து விருப்பு வாக்கு தேர்தல் முறையை அறிமு கம் செய்த தினத்திலேயே, எங்கள் நாட்டின் ஜனநாயக முறை யில் நடைபெறும் தேர்தல்கள் சீர்குலைந்து, வன்முறை கலாசா ரமொன்று தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்கான அடித்தள த்தை அமைத்தார்.

அன்று முதல் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருந்த 17 வரு டங்களிலும் தேர்தல்கள் நடுநிலையாகவோ, நேர்மையாகவோ நடத்தப்படாமல், தேர்தல்களில் வன்முறையை அறிமுகம் செய்து கள்ள வாக்குகளை பதிவு செய்தல் போன்ற பலதரப்ப ட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, அதையடுத்து தொடர்ந்து நடந்த பல தேர்தல்களில் வெற்றியீட்டியது.
முன்பிருந்தது போன்று தொகுதிவாரியாக தேர்தல்கள் நடத்தப்பட் டால், 1970ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 17 ஆசனங்களுடன் ஏற்பட்ட படுதோல்வியே தொடர்ந்து கொண் டிருக்கும் என்று அஞ்சிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாவ ட்ட ரீதியில் தேர்தல்களை நடத்துவதுடன், ஒரே கட்சியின் வேட்பாளர்களையும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டுமென்ற தேர்தல் முறையை அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் பணவசதியற்ற மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய நல்ல நேர்மையான வேட்பாளர்களுக்கு தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. பண பலமும் அதி கார செல்வாக்கும் உள்ளவர்களுக்கே இப்படியான விருப்பு வாக்கு பெறும் தேர்தல்களில் வெற்றி பெரும் வாய்ப்புகள் கூடுதலாக கிடைத்தன. இதுவும் தேர்தல் வன்முறைகளுக்கு தூபமிடும் மார்க்கமாக அமைந்தது.
அன்றிலிருந்து எங்கள் நாட்டில் எந்தவொரு தேர்தலும் நீதியாக வும், நியாயமாகவும், நடுநிலையாகவும், ஊழல்கள் இன்றியும் நடைபெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் இடமளிக்கவே இல்லை. அதற்கு பின்னர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் அலை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு எதிராக இருந்த காரணத்தினால், சிறிலங்கா சுதந் திரக் கட்சி வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது.
அதை அடுத்து அதிகாரத்திற்கு வந்த சகல அரசாங்கங்களும் இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு முய ற்சிகள் எடுத்த போதிலும், அம்முயற்சிகளுக்கு எதிர்கட்சிக ளின் பூரண ஆதரவு இல்லாத காரணத்தினால் தேர்தல் சட்ட த்தை திருத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அடுத்த பொதுத்தேர்தலுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர் தலுக்கு முன்னர் தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு விருப்பு வாக் குத் தேர்தல்முறை ஒழித்துக்கட்டப்படுமென்று ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது தீர்மானித்துள்ளார் என் றும், ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணத்தை வெற்றிகர மாக நிறைவேற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இன்று நாட்டில் தோன்றியிருக்கிறது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முல்லேரியா அசம்பாவிதங்களையடுத்து எதிர்க்கட்சியினர்கூட விரு ப்பு வாக்குகளைப் பெறும் தேர்தல் முறை மாற்றப்பட வேண் டுமென்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள் என்று இளை ஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று ‘ஏழா வது மணித்தியாலம்’ என்ற சுயாதீன சேவையின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இன்று நாட்டில் அதிகரித்துவரும் தேர்தல் வன்முறைகளுக்கு பிர தான காரணமாக இந்த விருப்புவாக்கு முறையே இருந்து வரு கிறது என்று சுட்டிக்காட்டிய டலஸ் அழகப்பெரும, தேர்தல் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், அதன் மூலம் தேர்தல் வன்முறைகளை கணிசமான அளவுக்குக் குறைத்து விடலாமென்றும் கூறினார்.
சமீபத்திய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எவ்வித வன் முறைகளும் ஏற்படாதிருந்த போதிலும், வாக்களிப்பு முடிவ டைவதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னர் ஏற்பட்ட அச ம்பாவிதம் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். இனிமேலாவது நாட்டில் வன்முறையற்ற தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் விருப்பு வாக்குகளை ஒரே கட்சி வேட்பாளர்கள் பெற வேண்டுமென்ற சட்டம் மாற் றப்படுவது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக