சனி, 15 அக்டோபர், 2011

Imelda Sukumar:வன்முறைகளை எதிர்த்து வீதியில் இறங்கத் தயார்

யாழில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து வீதியில் இறங்கத் தயார்

யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஆதாரங்கள் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு கடிதங்களாகவும், சீடிகள் மற்றும் தகவல் மூல ஆவணங்களாகவும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, தயவு செய்து பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் முதலில் அதை நிறுத்துங்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தால் பெண்கள் அமைப்புக்களை அணிதிரட்டி பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்காக வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக