செவ்வாய், 18 அக்டோபர், 2011

தீபிகா பல்லிகல் சாம்பியன் வாஷிங்டன் விஸ்பா ஸ்குவாஷ் போட்டியில்


Dipika Pallikal
டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல், வாஷிங்டனில் நடந்த விஸ்பா டிரெட் ஸ்குவாஷ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தப் போட்டியில் தீபிகா அபாரமாக ஆடி 11-9, 11-3, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.போட்டி முழுவதும் தீபிகாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஒரு செட்டைக் கூட பறி கொடுக்காமல் அவர் வெற்றி பெற்றார். இது இந்த ஆண்டு அவர் பெறும் 2வது சாம்பியன் பட்டமாகும்.

20 வயதான சென்னையைச் சேர்ந்த தீபிகா, கடந்த மாதம்தான், ஸ்குவாஷ் ரேங்கிங்கில், உலகின் 20 டாப் வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்தார். இந்த இடத்திற்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை தீபிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக