செவ்வாய், 18 அக்டோபர், 2011

கொழும்பு மேயர்: அரசாங்கமும் மாநகர சபையும் ஒரே மாதிரியான கொள்கையினைக் கொண்டுள்ள

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு வாழ் மக்களின் திட்டங்களுக்கு முஸ்ஸம்மில் ஆதரவு!

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்பித்துள்ள வீடமைப்புத் திட்டமானது மிகவும் வெற்றிகரமான ஒன்றாகும் என கொழும்பு புதிய மாநகர மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார். இத்திட்டம் வெற்றியளிப்பதற்கு கொழும்பு மாநகர சபையால் பெற்றுக் கொடுக்க வேண்டிய பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாரெனவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு சேரிக் குடியிருப்பு மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் திட் டத்தில் அரசாங்கமும் மாநகர சபையும் ஒரே மாதிரியான கொள்கையினைக் கொண்டுள்ளதாகவும் முஸம்மில் மேலும் கூறினார்.நேற்று (17) கொழும்பு மாநகர மேயராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் மூலம் கொழும்பு சேரிக் குடியிருப்பாளர் களின் பிரச்சினை தொடர்பாக அரசாங்கமும் எதிர் கட்சியும் ஒரே நோக்கத்தைக் கொண் டுள்ளதாகவும் முஸம்மில் வலியுறுத்தினார்.

கடந்த தேர்தலின் போது அரசாங்கமானது கொழும்பு சேரி குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தது.

எதிர்க் கட்சியும் வாக்காளர்களுக்கு அவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்று வதில்லை என்று வாக்குறுதியளித்தது. எனவே இதன்படி செயற்படும் போது இரு தரப்பினர்களிடையேயும் எதுவித மோதலும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் முஸம்மில் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில் :-


கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு நகரை அழகுபடுத்துவதற்கே திட்டமிட்டுள்ளார். அதன் பிரகாரம் குடிசைகளுக்குப் பதிலாக அந்த இடங்களில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் உருவாக உள்ளன. மேலும் அவர்களது வியாபார நடவடிக்கைகளை முன்னர் போன்றே மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே அவ்வாறான திட்டங்களுக்கு ஒத்துழைத்து கொழும்பு நகரை அழகுபடுத்துவதற்கு ஒத்துழைப்பதாக ஏ. ஜே. எம். முஸம்மில் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக