செவ்வாய், 11 அக்டோபர், 2011

கலாசாரத்தை மீறாது ஆடை அணியுமாறும் எச்சரிக்கை!மாணவியர் மீது முகமூடி அணிந்த

பாகிஸ்தானின் மாணவியர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் : இஸ்லாம் கலாசாரத்தை மீறாது ஆடை அணியுமாறும் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் முக்கிய நகரான ராவல்பிண்டியில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 60 பேர் அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவியர் மற்றும் ஆசிரியைகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்பாடசாலையில் சுமார் 400 மாணவியர் கல்விகற்று வருவதுடன் 30க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 8ஆம் தேதி, முகமூடி அணிந்த 60 க்கும் மேற்பட்டோர், கைகளில் இரும்பு ஆயுதங்களுடன் பாடசாலையினுள் நுழைந்துள்ளனர். அங்கு மாணவியரும், ஆசிரியைகளும் ஆடம்பரமாக, இஸ்லாமிய கலாசாரத்தினை மீறி உடையணிந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், அனைவரையும் ஆயுதங்களால் அடித்தனர்.

பின்னர் அனைவரும் “அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து வர வேண்டும். அனைவரும் தலையில் அணியும் ‘ஹிஜாப் ‘அணிய வேண்டும்” என, மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக