புதன், 12 அக்டோபர், 2011

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்ப்போம்: சிபிஐ, மத்திய அரசு


Kanimozhi
டெல்லி: திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியான செய்தி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிபிஐயும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தன.

2ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்க்காது என்று செய்திகள் வெளியாயின. தொழிலதிபர்களை சிறையில் வைத்திருந்தால் நாட்டில் முதலீடுகள் பாதிக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்துத் தெரிவித்திருந்தார்.இந் நிலையில் இன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்ட அமைச்சரின் சொல்லியதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையா.. தொழிலதிபர்களை சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்பது போல அவரது கருத்து உள்ளது. அவரது பேச்சு குறித்து வெளியான செய்திகள் உண்மையானால் அது வருத்தமான விஷயம். மேலும் கனிமொழி உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அது உண்மையல்ல. நாங்கள் அந்த ஜாமீன் மனுக்களை நிச்சயம் எதிர்ப்போம் என்றார்.

அதே போல சிபிஐயும் ஜாமீன் மனுவை எதிர்க்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்று நீதிபதிகள் கூற, அதை சிபிஐ வழக்கறிஞர் மறுத்தார். நாங்கள் கனிமொழி உள்ளிட்ட அனைவரின் ஜாமீன் மனுக்களையும் எதிர்போம் என்றார்.

ப.சிதம்பரம் குறித்து அறிக்கை அளிக்க சாமி விருப்பம்:

இந் நிலையில் 2ஜி ஊழல் வழக்கில் துணை குற்றவாளியாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை அளிக்க விரும்புவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக