புதன், 12 அக்டோபர், 2011

சிவகாசி ஜெயலட்சுமி விடுவிப்பு

சிபிஐ கொடுத்த புகாரின் பேரில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிவகாசி ஜெயலட்சிமி விடுவிக்கப்பட்டார்.
ஏட்டு முதல் எஸ்பி வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. இவர் மீது சிபிஐ நகை மோசடி புகார் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை ஜெஎம் 3 நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது.
இந்த வழக்கில் ஜெயலட்சுமி 75 பவுன் நகை வாங்கி மோசடி செய்ததாக, கோவையைச் சேர்ந்த முருகவேல் (இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர்) புகார் கூறியிருந்தார். அந்தப் புகார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ அதை உறுதி செய்து, கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடத்தியது.

சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் விசாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், 07.10.2011 அன்று நீதிபதி கதிரவன் வருகிற 11.10.2011 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கான நகல் தயாரிப்பு காலதாமதமானதால், இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை (12.10.2011)இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே சிவகாசி ஜெயலட்சுமி மீது சிபிஐ 4 வழக்குகளை விசாரித்து பதிவு செய்தது. இதில் சிவகாசி ஜெயலட்சுமி மூன்று வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். எஞ்சியுள்ள ஒரு வழக்கில் தீர்ப்பு என்பதால், ஜெயலட்சுமி தரப்பு பதட்டத்தில் இருந்தது.
தீர்ப்பையொட்டி இன்று காலை சிவகாசியில் இருந்து மதுரை நீதிமன்றத்துக்கு வந்த ஜெயலட்சுமி, நீதிமன்ற வளாத்தில் காத்திருந்தார்.
சிவகாசி ஜெயலட்சுமி, அவரது தம்பி சீனிவாசன் உட்பட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி கதிரவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக