ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தினமலர், துக்ளக், தினமணி உள்ளிட்ட வகையறாக்களுக்கு திராவிடர் கழகத்

தினமலர், துக்ளக், தினமணி உள்ளிட்ட வகையறாக்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சமூக நீதிக்காவலர் வி.பி.சிங், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற பெயர்களைக் கேட்ட மாத்திரத்திலேயே ரத்தக் கொதிப்பு இருநூறைத் தாண்டிவிடும்.
ஆனால் தினமலர் திராவிடர் கழகத் தலைவரை அர்ச்சனை செய்யாவிட்டால் அன்று இரவு தூக்கம் காணாமற்போய்விடும், அவ்வளவு ஆத்திரம்!
ராமசாமி நாயக்கரோடு கதை முடியும் என்று நினைத்து நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தோமே,  இந்த ராட்சசன் வீரமணி இருந்து தொலைக்கிறானே! என்ற ஆத்திரம் அனல் பறக்கிறது அவாள் வட்டாரத்தில். இந்த ஒரு வார காலத்துக்குள் இரண்டாவது அர்ச்சனை தினமலரில்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:  ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி எனும் கல் முதலாளியின் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பணம் மக்களுக்கே என்ற அடிப்படையில், அந்தப் பணம் மக்களுக்குத் திருப்பி அளிக்கப்படவேண்டும்.
டவுட் தனபாலு: வருமானம் போயிடும்னு பயந்து, இவங்களோட இனமானத் தலைவர் ஈ.வெ.ரா.வின் புத்தகங்களைக் கூட பொதுவுடைமை ஆக்காது, லொள் முதலாளி  பேசுற பேச்சைப் பாருங்க.
(தினலர் 9-7-2011 பக்கம் 8)
கல் முதலாளி என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னால், அவருக்கு லொள் முதலாளி என்று பட்டம் கொடுக்கிறது தினமலர்.
ஜொள் முதலாளிதானே அவாளின் ஜெகத்குரு!
திராவிட இயக்கம் என்றாலே வல் வல் என்று குரைக்கும் கூட்டம்தானே இது என்று எங்களுக்கு எழுதத் தெரியாதா?

கறுப்புக்கு மறுப்பு என்று எத்தர்கள் எழுதியபோது மறுப்புக்குச் செருப்பு என்று அடி கொடுத்தவர்கள் நாங்கள்! வார்த்தை விளையாட்டு எங்களிடம் வேண்டாம்! எச்சரிக்கை!
திராவிடர் கழகம் வெளியிடும் நூல்கள் வியாபார நோக்கம் கொண்டவையல்ல! திராவிடர் கழகம் வெளியிடும் நூல்கள் அளவுக்கு மலிவு விலையில் கொடுப்பவர் எவர்? என்று சவால் விட்டுக் கேட்கிறோம். சவாலை ஏற்குமா தினமலர் வகையறாக்கள்...?
அரை நிர்வாண நடிகைப் படங்களையும், ஜோதிடக் குப்பைகளையும், மூட முடை நாற்றம் வீசும் ராசி பலன்களையும், அருவருக்கத் தக்க ஆன்மிக இணைப்புகளையும் வெளியிட்டுக் காசாக்கும் பார்ப்பன ஊடகங்களா இலட்சியம் சார்ந்த கழகத்தின் வெளியீடுகளை லாப நோக்குப் பட்டியலில் சேர்ப்பது?
பெரியார் நூல்கள் வெளியீடு என்பது வருமானத்துக்காக அல்ல. தமிழர்களிடம் தன்மானம் ஊட்டுவதற்காக.
பெரியார் படைப்புகளை அட்சரம் பிறழாமல், கால் புள்ளி, அரைப் புள்ளி மாறாமல் வெளியிடுவதாக உத்தரவாதம் கொடுத்தால் அவற்றை நாட்டுடைமையாக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எத்தனை முறை ஓங்கி அடித்துக் கூறியிருப்பார்.  செவிட்டுக் காதுகளுக்கு எங்கே கேட்கப்போகிறது?
இறுதி உரையில் ஈரோட்டுச் சிங்கம் கர்ஜித்ததே - நினைவிருக்கிறதா?
பார்ப்பனர்களைக் கண்டால்,  வாப்பா, தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்கவேண்டும்.  ஏண்டா அப்படி கேட்கிறாய்? என்றால்,   நீ எழுதி வைத்ததடா - என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! என்ன தப்பு?
என்று பேசினாரே (19-12-1973 - சென்னை தியாகராயநகர்) இன இழிவு ஒழிப்பு ஏந்தல் தந்தை பெரியார்.
நாட்டுடமை ஆக்க வேண்டும் பெரியார் நூல்களை என்று மாரிக் காலத் தவளைகளாக இரைபவர்கள் இந்த உரையை அப்படியே அட்சரம் மாறாமல் அச்சிடுவார்களா? அரசுதான் முன் வருமா?
மற்றவை போன்றதல்ல மண்பொதுத் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் - எழுத்தும்!
பல்லாயிரம் ஆண்டுகால இன இழிவைத் தீர்த்துக் கட்ட எரியீட்டியாகப் பாயக் கூடியவை அவை!
அவற்றோடு விளையாடிப் பார்க்க ஆசைப்படக்கூடாது. திரிபுவாதத் திருடர்கள் களவாட இடம் கொடுக்க முடியாது. திரிபுவாதம் செய்ய நாக்கை நீட்டிக் கொண்டிருக்கும் மலைப் பாம்புகளின் தந்திரம் எங்களுக்குத் தெரியும்.
காலைக்கதிர் (தினமலர் குரூப்) வெளியாகும் அதே ஆசிரியர் கடிதங்களை (இது உங்கள் இடம் பகுதியில்) கால்புள்ளி, அரைப்புள்ளி வித்தியாசம் கூட இல்லாமல் அப்படியே வேறு பெயரில் தினமலரில் வெளியிடும் தகடுதத்த திருட்டுக் கூட்டமா, திராவிடர் கழகத்தை விமர்சிப்பது?
வெட்கம்!  வெட்கம்!!  மகாவெட்கம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக