ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தொண்டர்களின் அண்டர் கிரௌண்ட் கூட்டணி தேதிமுகாவுக்கு வேட்டு வைத்துவிட்டது

துள்ளுகிறார் விஜயகாந்த் “திருச்சியில் ‘திரி’ குடுத்தப்பவே புரிஞ்சிருக்கணும்”கேப்டனுக்கு தாமதமாகவே விஷயங்கள் புரியத் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள். அவருக்கு நம்பத் தகுந்த கட்சி சோர்ஸ்கள் சொல்லும் தகவல்கள், அவரது கட்சிக்குள் அ.தி.மு.க. எந்தளவுக்கு ஊடுருவி விட்டது என்பதைக் காட்டுகிறதாம். 

அதன் பாதிப்புதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள தலைகுனிய வைக்கும் ரிசல்ட் என்று நினைக்கிறார் அவர். கேப்டனுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே, திருச்சி இடைத் தேர்தலில் தொடங்கி விட்டதாம் எதிர் நீரோட்டம். தே.மு.தி.க.வுடன் கூட்டணி கிடையாது என்பது வெளிப்படையாகத் தெரியும் முன்னரே, திருச்சி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. அல்லையன்ஸ், லோக்கல் லெவலில் ஃபெவிகால் ஒட்டாக ஒட்டிவிட்டது. இதையெல்லாம் இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர்.ஆனால், இப்போது டூ-லேட்! திருச்சி மேற்கு இடைத்தேர்தல் பற்றி, “7,000 ஓட்டு வித்தியாசத்தில ஜெயிச்சவங்க எப்படிய்யா இவ்வளவு லீடிங்குக்கு வந்தாங்க?” என்று தனது திருச்சி சோர்ஸ்களிடம் விஜயகாந்த் விசாரித்த போதுதான், “அதான் நம்ம கூட்டணி அங்கே இருந்துச்சே” என்று கூறி அதிர வைத்தார்களாம் கேப்டனை. “உள்ளாட்சித் தேர்தல் வேலையில் பிசியாக இருந்ததால, இவங்க திருச்சியில நமக்கே ‘திரி’ குடுத்த விஷயம் தெரியாம போச்சே” என்று துள்ளிய கேப்டன், திருச்சி மாவட்ட தே.மு.தி.க. பிரமுகர்களில் லிஸ்ட்டைக் கையில் எடுத்திருக்கிறாராம்! அவர்கள் பெயருக்கு நேரே கட்டம் போடுவாரா,  அல்லது டைரக்டாக முதுகிலேயே போடுவாரா என்பதுதான் சஸ்பென்ஸ்!


 • உங்கள் ஆதரவு தேவை – நண்பர்களுக்கும் “விறுவிறுப்பு.காம்” அறிமுகம் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக