புதன், 28 செப்டம்பர், 2011

யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள TNA தீர்மானித்துள்ளதாக

அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள TNA தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்க்ள் தகவல் வெளியிட்டுள்ளன??

அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்க்ள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் இது குறித்து கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளனவா என்பதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறித்த யோசனைத் திட்டம் தொடர்பில் பதிலளிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக கூறும் கொழும்பு ஊடகங்கள் மேலும் முக்கியமான விடயங்களை வெளியிட்டுள்ளன.

பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டம் காலத்தை கடத்தும் ஓர் முயற்சி எனவும், அது தொடர்பில் பதிலளிக்கப் போவதில்லை எனவும் கட்சி அறிவித்து வந்தது.
எனினும், பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்த யோசனைத் திட்டத்திற்கு ஆக்கபூர்வமான முறையில் கூட்டாக பதிலளிப்பது என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முனைப்பு காட்டப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஆக்கபூர்வமாக பதிலளிக்கும் அதேவேளை, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலனை செய்வதென கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, சர்வகட்சிப் பேரவை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கவனத்திற் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களின் பின்னரே பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக