புதன், 28 செப்டம்பர், 2011

வியாபாரியிடம்12.5 கிலோ தங்கம் கொள்ளை சீர்காழியில்

மயிலாடுதுறை:  சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தங்க நகை வியாபாரி பவன் குமார் ஜெயின் சென்னையில் 12.5 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு 1.30 மணி அளவில் அவரது கார் சீர்காழி அருகே உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருக்கையில் பாதரக்குடி என்னும் ஊரில் அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்கள் வந்துள்ளது. அவற்றில் 4 பேர் இருந்துள்ளனர்.
பின்தொடர்ந்தவர்கள் திடீர் என்று காரை வழிமறுத்துள்ளனர். பவன் குமாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சீர்காழியி்ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக