புதன், 28 செப்டம்பர், 2011

மாண்டலின் சீனிவாஸ் மனைவிக்கு மேலும் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம்




சென்னை : விவகாரத்தான மனைவிக்கு மேலும் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க மாண்டலின் சீனிவாஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த யுவஸ்ரீ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் மாண்டலின் சீனிவாஸ்க்கும் 1994 மே 27ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தோம்.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு விவகாரத்து வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளது. இதை அதிகபடுத்த வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் விசாரித்து, ‘‘குடும்பநல நீதிமன்றம் விவகா ரத்து வழங்கியது சரியானதுதான். அது செல்லும். அதை ரத்து செய்ய முடியாது.

 இதுதவிர மனுதாருக்கு சீனிவாஸ் ஏற்கனவே ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்கியது போதாது. எனவே மேலும் ரூ.10 லட்சம் ஜீவனாம்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மகனுக்கு தற்போது 16 வயதாகியுள்ளது. இந்த தொகையில் ரூ.5 லட்சம் மகனுக்கு கொடுக்க உத்தரவிடுகிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக