மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, "போர் பிரண்ட்ஸ்" படம், தமிழில் "அன்புள்ள கமல்" என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
"தெனாலி", "பஞ்சதந்திரம்" ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயராம், மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த படம் "போர் பிரண்ட்ஸ்". இந்தபடத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில், முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். கமல், ஜெயராமுடன், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாஜி சுரேந்திரன் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் இப்படம் சூப்பர் டுப்பர் ஹி்ட்டாகியுள்ளது. இந்தபடத்தில் கமல்ஹாசன் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். இப்படத்தைதான் தமிழில் அன்புள்ள கமல் என்று மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். பி.சகாயராஜின் பி.எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் பி.எஸ்.ஆர்.பிரதீப், பி.எஸ்.ஆர்.பிரசாத், பி.எஸ்.ஆர்.மைக்கேல் தயாரித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக