முதலமைச்சர்களுக்குக் கடிதம்
புதுடில்லி, செப்.2: இந்தியாவில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வருவது பற்றி கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த பிரச்சினை தொடர்பாக மாநில முதல் அமைச்சர்க ளுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவில் சமீபத் தில் எடுக்கப்பட்ட 2011-ஆம் ஆண்டின் தற்கா லிக மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 6 வயது வரையிலான 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 வரை மட்டுமே பெண் குழந்தைகள் விகி தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விகித மானது ஆந்திர பிரதே சம், சத்தீஸ்கார், பீகார் உள்ளிட்ட சில மாநிலங் களில் மிகவும் குறை வாகக் காணப்படுகிறது.
எனவே, இதுகுறித்து விரைவான மற்றும் கூட்டு முயற்சியுடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல் அமைச்சர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறி இருப்பதாவது:- சில மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதே சங்களில் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம், நாட்டின் மொத்த விகிதாச்சாரத்தைவிட மிகவும் குறைவாக உள் ளது. இந்த பிரச்சினை குறித்து மாநில முதல் அமைச்சர்கள் தீவிர அக்கறையுடன் செய லாற்ற வேண்டும்.
1994-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கருவில் இருக்கும் குழந் தைகளுடைய பாலி னத்தை தெரிந்து கொள் வதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்தை கடு மையாக அமல்படுத்த வேண்டும்.
மத மற்றும் சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மூலமாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற் படுத்துவதன் மூலமாக வும், கொள்கை மற்றும் வேலைத்திட்ட நடவடிக் கைகளை மேற்கொள்வ தன் மூலமாகவும் பெண் களுக்கு எதிரான சமூக பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளைக் களை வதற்கு தேவையான நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இந்த சட்டத்தை பல பகுதிகளில் அமல்படுத் துவது சவாலான ஒன் றாக இருந்து வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடுமையாக மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த தேவை யான கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறை களை பலப்படுத்த வேண்டும்.
இந்த சட்டத்தை பல பகுதிகளில் அமல்படுத் துவது சவாலான ஒன் றாக இருந்து வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடுமையாக மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த தேவை யான கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறை களை பலப்படுத்த வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தி சட் டத்தை மீறுவோர்களுக்கு விரைவாக மற்றும் கடு மையான தண்டனை கிடைக்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடி தத்தில் பிரதமர் மன் மோகன்சிங் தெரிவித் துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக