வியாழன், 15 செப்டம்பர், 2011

யாழில் குளியலறைக்குள் பதுங்கியிருந்த சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைப்பு!


ந்தேகத்திற்கு இடமான முறையில் குளியலறையொன்றினுள் மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். நையப்புடைக்கப்பட்ட நிலையில் இவ்விராணுவச் சிப்பாய் இன்று இரவு 7.30 மணியளவில் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.
யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியினில் வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் மறைவாக அங்குள்ள குளியலறையொன்றினுள மறைந்துகொண்டதை அவதானித்துள்ளார்.. இதனையடுத்து அயலவர்களும் ஒன்று திரண்டு மறைந்திருந்த இராணுவச் சிப்பாயினை பிடித்து யாழ் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இராணுவச் சிப்பாய் யாழ் நகரப்பகுதியிலுள்ள 512வது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக