வியாழன், 15 செப்டம்பர், 2011

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!


யாழ். தீவகக் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் இருவரினது சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதன. சிலம்பம்பட்டி நாமக்கல்லைச் சேர்ந்த 31 வயது பொன்னுச்சாமி தேவானந்தன் என்ற தொழிலாளி கடந்த மாதம் 28ம் திகதியும் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயது சீனி முருகானந்தம் என்ற தொழிலாளி கடந்த 4ம் திகதி ஊர்காவற்றுறை கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டனர். உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இச்சடலங்கள் இன்று மருத்துவமனையில் வைத்து இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மற்றும் கடற்றொழிலாளர்களின் உறவினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக