வியாழன், 15 செப்டம்பர், 2011

44 பேரில் 6 பேர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்!

அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லும் போது கைது செய்யப்பட்ட 44 பேரில் 6 பேர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்!

அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லும் போது கைது செய்யப்பட்ட 44 பேரில் 6 பேர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்!

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லும் போது கைது செய்யப்பட்டவர்களில், 6 பேர், புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

இதனை குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட 44 பேர் அண்மையில், கடந்த 11ம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விளக்கமளித்த காவற்துறையினர், அவர்களில் 6 பேர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என நீதிமன்றில் தெரிவித்தனர்.

தற்போது அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கைதான 44 பேரில் 36 பேரை, எதிர்வரும் 28 திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும், கைதான இரண்டு சிறுவர்களை சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக