வியாழன், 15 செப்டம்பர், 2011

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதுவித மன வருத்தமும் இல்லை

இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதுவிதம் மன வருத்தமும் இல்லை-பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின்!

இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதுவிதம் மன வருத்தமும் இல்லை என இலங்கை மற்றும் மலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட காணொளியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான உறவானது வரலாற்று ரீதியிலானும் மிகவும் பலம்வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக செயற்படுவர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன மக்களால் கேக்கப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், யுத்தத்துக்கான காரணங்களை தேடிக் கண்டறிந்து அதனை நிவரத்தி செய்து நாட்டில் நீண்டகால சமாதானத்துக்கு வழி செய்ய இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இலங்கைக்கு பிரித்தானியாவின் ஆதரவு எப்போதும் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக