வியாழன், 15 செப்டம்பர், 2011

கொழும்பில் வறியவர்களுக்கு 30000 வீடுகள்!


கட்டம் கட்டமாக அமைக்கத் திட்டம்
கொழும்பில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வசிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாக பதில் அமைச்சரபை பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக