வியாழன், 15 செப்டம்பர், 2011

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர்-டக்ளஸ் தேவானந்தா!


அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர்

பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடிக்காரர் எனக் குற்றமும் சாட்டியுள்ளார்.அத்துடன் பிளேக், உள்நோக்கம் கொண்ட ஒரு சில தன்னுடைய கொடுக்கல் வாங்கல்களை உள்வாங்கக் கூடியவர்கள் ஊடாகவே செய்தியை பரப்பி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக்குழு இயங்கி வருவதாகவும் அவர்கள் இன்னமும் மக்களிடம் கப்பம் பெற்று வருவதாகவும் யாழ்ப்பாண மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவ்வாறு ஈ.பி.டி.பியினர் செயற்படுவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என கொழும்பில் பிளேக் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக