செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை!

தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்து மீ்ண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பல் நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வரையான தனது பயணத்தை ஆரம்பித்ததாக கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் சாந்த வீரக்கோன் குறிப்பிட்டார்.
கப்பல் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
குறிப்பிட்டளவு பயணிகளுடன் இந்தக் கப்பல் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த இலங்கை - இந்திய கப்பல் சேவை 30 வருடங்களின் பின்னர் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக