செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர் 'அந்தர் பல்டி'!

டெல்லி: 2ஜி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா திடீர் பல்டி அடித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்துக்கும் எல்லாம் தெரியும் என்றும், இதனால் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வந்த ராசா இன்று உச்ச நீதிமன்றத்தில் பல்டி அடித்துவிட்டார்.
இன்று நடந்த 2ஜி வழக்கு விசாரணையின்போது ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார் வாதாடுகையில்,

இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது. அவரை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தால் இந்த வழக்கின் முழு விசாரணையும் மேலும் தாமதமாகும், வழக்கு மேலும் இழுத்துக் கொண்டே போகும். இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிறருக்கு ஜாமீன் கிடைப்பது கூட பிரச்சனையாகும். எனவே அவரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக