செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழில் பேசியவர்களே கிறீஸ் பூதமாகத் தோன்றி,இமல்டா சுகுமார்

தமிழில் பேசியவர்களே யாழ். தமிழ்ப் பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர்-யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார்!

தமிழில் நன்கு உரையாடக் கூடியவர்களே யாழ். குடாவில் கிறீஸ் பூதமாகத் தோன்றி தமிழ் பெண்களுடன்பெண்களுடன் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டனர் என்றும் இவர்களைக் கட்டுப்படுத்த இராணுவமும் பொலிசாரும் தவறிவிட்டனர் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைச் சட்டம் தண்டிக்காவிட்டாலும் தான் தண்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் மேலும் கூறியுள்ளார். இன்று (27) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் அவர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சிவில் சமூக ஓழுங்குகளைத் திட்டமிட்டு சீர்குலைக்கும் நடவடிக்கையாகவேதான் இந்த மர்ம மனிதர் விவகாரத்தை நான் நோக்குகிறேன். கிறீஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்ட பல பெண்களை வைத்தியசாலையில் சென்று பார்த்த போது, அவர்கள் தங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி தன்னிடம் மன்றாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக