ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

அதிவேகமாக பரவும் இன்டர்நெட்டுக்கு அலறும் சீன கம்யூனிஸ்ட் அரசு!.

பிஜிங்: இளைஞர்களிடம் பரவி வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடுகள் சிதைந்துவிடும் என்று சீன அரசக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியில் இன்டர்நெட் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சில நிமிடங்களில் உலகளவில் தகவல்கள் பரவ இன்டர்நெட் வழிவகுப்பது சீன அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிராக இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இன்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். இதன் மூலம் பொதுமக்களிடம் ஆங்காங்கே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

இன்டர்நெட் தகவலின் அடிப்படையில் சீனாவில் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த சீன அரசு ஆயிரக்கணக்கான இன்டர்நெட் வெப்சைட்டுகளை அழித்து விட்டது. பல வெப்சைட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும் இன்டர்நெட்டை சீனாவில் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், அதிகரித்து வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால், உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்துவிடும்.

பல நாட்டு அரசுகள் நெருக்கடியை சந்தித்து வருவதற்கு இன்டர்நெட்தான் காரணம்ÕÕ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டிவிட்டர், பேஸ் புக் போன்றவற்றில் அரசு நாடுகளில் இருந்து பலரும் பலவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருவதால், அவற்றை எப்படி தடுப்பது என்று தெரியாமல் சீன அரசு கைபிசைந்து வருகிறது. இன்டர்நெட்டில் உடனடியாக கருத்து பரவுகிறது. அது ஒரு மாபெரும் இயக்கத்துக்கு வழிவகுக்குகிறது என்று கம்யூனிச எழுத்தாளர்களும் அரசை எச்சரித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக