ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பிரதமர், 71 மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியீடு

புதுடெல்லி : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் 71 பேரின் சொத்து பட்டியல்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட் டன. சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சர்ச்சையை கிளப்பியது. இதன்பின், நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க பிரதமர் முடிவு செய்தார். இதற்காக, மத்திய அமைச்சர்கள் இந்த ஆண்டு தங்கள்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் மற்றும் 71 அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தனர். பிரதமர் உள்பட 72 பேரின் சொத்து பட்டியல்கள், பிர தமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதில் பணக்கார அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கமல்நாத் மொத்தம் ரூ.263 கோடி சொத்துகள்  உள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், ஸீ2.7 கோடிக்கு வங்கி டெபாசிட்கள், சண்டிகரில் ஸீ90 லட்சத்தில் வீடு, டெல்லியில் ஸீ88 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 1996ம்  ஆண்டு மாடல் மாருதி 800 கார் வைத்துள்ளதாகவும், மனைவி கவுரின் சேமிப்பு கணக்கில் ஸீ11 லட்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஸீ11.15 கோடிக்கும், மனைவி நளினி சிதம்பரத்துக்கு ஸீ12.34 கோடிக்கும் சொத்துகள் மற்றும் 4 கார்கள் உள்ளதாக கூறியுள்ள £ர். விவசாய அமைச்சர் பவார் ஸீ12 கோடி, தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் ஸீ20 கோடி, பிரணாப் முகர்ஜி ஸீ3 கோடி என்று சொத்து விவரம் அளித்துள்ளனர்.
குறைந்த பட்சமாக, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தனக்கு அசையா சொத்துகளே இல்லை என்றும், தன்னிடம் ஸீ1.8 லட்சம் சேமிப்பும், மனைவிக்கு ஸீ30 லட்சம்  சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார். தகவல் தராத 5 பேர்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கேபினட் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணா டிராத், இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், ஜிதேந்திர சிங் ஆகிய 5 பேர் மட்டும் இன்னும் சொத்து விவரங்களை பிரதமரிடம் தாக்கல் செய்யவில்லை. முக்கிய அமைச்சர்கள் சொத்து பட்டியல்:

பிரதமர் சொத்து

பிரதமர் மன்மோகன் சிங்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 4,498 சதுரடி மனையில் 2,907 சதுரடி கொண்ட 2 அடுக்கு மாடி வீடு & மதிப்பு ரூ90 லட்சம். டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ரூ88.67 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு. விவசாய நிலம் எதுவுமில்லை. பல்வேறு வங்கிகளில் ரூ3.22 கோடி டெபாசிட், சேமிப்பு. 1996ல் வாங்கிய மாருதி &800 கார் & மதிப்பு ரூ24,745. மனைவி குர்சரண் கவுர் பெயரில் சண்டிகர் வங்கியில் ரூ11 லட்சம் டெபாசிட். தங்க நகைகள் 150.8 கிராம் & மதிப்பு ரூ2.75 லட்சம். மொத்த சொத்து மதிப்பு ரூ5.11 கோடி.

வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா:
ரூ31 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் விவசாய நிலங்கள், 2 கார், ரூ50 ஆயிரம் மதிப்பில் நகைகள். ரூ3 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ27 லட்சம். தொழிலில் ரூ88 லட்சம் முதலீடு. மனைவிக்கு ரூ2.21 கோடி சொத்து, ரூ14 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ8.42 லட்சம்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம்:
ரொக்க கையிருப்பு: ரூ4,574,324
வங்கி டெபாசிட்: ரூ12,907,699
பங்குகளில் முதலீடுகள்: ரூ9,129,955
குடகுமலையில் காபி எஸ்டேட் மதிப்பு ரூ2,894,579
ஸ்கோடா, போர்டு பியஸ்டா, வோக்ஸ்வேகன் கார்கள்.
மொத்த சொத்துகள் : ரூ111,585,090
மனைவியின் சொத்துகள்: ரூ123,477,967

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி:
மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ90 லட்சத்தில் 3 விவசாய நிலம். சுமார் ரூ2 கோடி மதிப்பில் 5 பிளாட்கள். ரூ1.13 கோடி மதிப்பில் 4 வீடுகள். தொழிலில் ரூ1.28 கோடி முதலீடு, வங்கியில் ரூ2 லட்சத்து 26 ஆயிரம் சேமிப்பு. இரண்டு கார். ரூ1.42 லட்சம் மதிப்பில் 85 கிராம் தங்க நகை. மனைவி பெயரில் 3 இடங்களில் சுமார் ரூ37 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்கள், ரூ5.83 கோடியில் 4 பிளாட்கள், ரூ25 லட்சம் மதிப்பில் வீடு. ரூ1.33 கோடியில் வர்த்தக கட்டிடம். வங்கியில் ரூ1.25 லட்சம் சேமிப்பு, 2 கார், ரூ1.95 கோடியில் தங்க மற்றும் வைர நகைகள்.

ஜி.கே.வாசன் (கப்பல் போக்குவரத்து அமைச்சர்):
சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் ரூ18.75 லட்சம் மதிப்புள்ள 4ல் ஒரு பங்கு சொத்து. கும்பகோணம் பெசன்ட் சாலையில் 4ல் ஒரு பங்கு வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடம் & மதிப்பு ரூ1.40 கோடி. கபிஸ்தலம் கிராமத்தில் ரூ7.33 லட்சம் மதிப்புள்ள 7.33 ஏக்கர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ70,000 மதிப்புள்ள 0.14 ஹெக்டேர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ4.41 லட்சம் மதிப்புள்ள 0.13.5 ஹெக்டேர் வீட்டுமனை. ரூ7.06 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் நகை. வங்கியில் சேமிப்பு ரூ18.39 லட்சம். மனைவி சுனிதா வாசனுக்கு 750 கிராம் நகைகள் & மதிப்பு ரூ13.23 லட்சம். 10 காரட் வைர நகை & மதிப்பு ரூ4 லட்சம். வெள்ளி மற்றும் இதர பொருட்கள் ரூ15.36 லட்சம். மகன் பிரணவுக்கு 100 கிராம் நகைகள் & மதிப்பு ரூ1.76 லட்சம்.

நிதித்துறை அமைச்சர்
பிரணாப் முகர்ஜி:
டெல்லி, கொல்கத்தாவில் தலா ஒரு பிளாட் வீடு உள்ளது. இதன் மதிப்பு, ரூ50 லட்சம். மேலும் மேற்கு வங்காளத்தில் பீர்பம் மாவட்டத்தில் பூர்வீக சொத்து உள்ளது. 2000ம் ஆண்டில் வாங்கிய போர்டு கார் ஒன்றும் வைத்துள்ளார். இது தவிர வங்கிகளில் ரூ50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி சுர்வாவுக்கு ரூ1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள 5 வீடுகளும், விவசாய நிலமும் உள்ளது. ரூ22 ஆயிரம் மதிப்புள்ள பழைய அம்பாசிடர் காரும் வைத்துள்ளார். ரூ31 லட்சம் மதிப்புள்ள 1,395 கிராம் தங்க நகைகள் மற்றும் வங்கியில் ரூ21 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக