வியாழன், 15 செப்டம்பர், 2011

பங்கு சந்தை ஊழல் ஹர்ஷத் மேத்தா சொத்தில் ரூ.650 கோடி விடுவிப்பு


மும்பை : பங்கு சந்தை ஊழல் விசாரணையின்போது முடக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தாவின் பணத்தில் இருந்து ரூ.650 கோடியை விடுவிக்கும்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் பங்கு சந்தை ஊழல் நாட்டையே உலுக்கியது. இதில் ஈடுபட்ட மோசடி மன்னன் ஹர்சத் மேத்தா கைது செய்யப்பட்டார். மேலும், ஹர்ஷத் மேத்தாவின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசு முடக்கி வைத்துள்ளது. இவை, மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தற்போது, ஹர்சத் மேத்தாவின் சொத்துகளில் இருந்து ரூ.650 கோடியை விடுவிக்கும்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், ரூ.28.34 கோடி வருமான வரித் துறைக்கும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.259.65 கோடியும், ரூ.345.76 கோடி சான்டர்ட் சாட்டர்ட் வங்கிக்கும் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச்சில் இதேபோல் ரூ.2200 கோடியை ஹர்ஷத் மேத்தாவின் சொத்தில் இருந்து விடுவிக்கும்படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ரூ.2 ஆயிரம் கோடி வருமான வரித்துறைக்கும், மற்றவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக