வியாழன், 15 செப்டம்பர், 2011

இனி ஒரிஜினல் கெட்அப் அஜீத் அதிரடி முடிவு!

அஜீத் கூறியது: மங்காத்தா படத்தின் பெரிய வெற்றி மகிழ்ச்சியை தந்துள்ளது. அர்ஜுன் இதில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். ‘இப்படியொரு வேடம் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும்' என்று நானே அவரிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார். எந்தவொரு இடத்திலும் அவரது கேரக்டர் பாதிக்கக்கூடாது என்பதில் நானும் வெங்கட்டும் கவனமாக இருந்தோம்.

வெள்ளை நிற தலைமுடியுடன் நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதுதானே எனது நிஜ தோற்றம். ‘பில்லா 2' படத்துக்கு பிறகு ‘மங்காத்தா' வில் தோன்றிய அதே தோற்றத்தில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்கு தகுந்த ஸ்கிரிப்டை மட்டுமே ஒப்புக்கொள்வேன். விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு போன்ற இயக்குனர்களின் படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. ‘பில்லா 2' முடிந்தபிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்பது பற்றி முடிவு செய்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக