வெள்ளி, 30 செப்டம்பர், 2011

நாடுகடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் விடுதலை!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42 ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.இவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான விஸா இல்லாததால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்...

பிரித்தானியாவிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரக்டர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக