வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த  4 வயது சிறுமி சுவாதி,  அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். 1 1/2  மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஷ்கோ, அசிரியை போர்சியா ஆகியோர் மாணவி சுவாதியை அறையில் அடைத்து வைத்து செக்ஸ் சித்ரவதை செய்தனர்.

 இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் இருட்டு அறையில் பாம்புடன் உன்னை அடைத்து வைத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். ஆனாலும் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சுவாதி தனது பெற்றோரிடம் வந்து கூறினார். இதனால் கோபம் அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் 20 பேரை அழைத்துக்கொண்டு 2 ஆசிரியைகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களை தாக்கினார்கள்.

இதில் போர்சியா காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலையில் இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி நகரமே பரபரப்புக்கு உள்ளானது. இந்த தகவல் தெரிந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை போர்சியாவும், தலைமை ஆசிரியை லசி போஷ்கோவும் கள்ளக்குறிச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து 2 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.   பின்னர் தலைமை ஆசிரியை லசிபோஷ்கோவை போலீசார் கைது செய்தனர். அவர் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். போர்சியா தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் அங்கிருந்தபடியே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். கைது செய்யப்பட்ட லசிபோஷ்கோ தற்போது ஜாமீனில் வெளியே வந்து தினமும் கடலூர் கோர்ட்டில் கையெழுத்து போட்டு வருகிறார்.

போர்சியா கள்ளக்குறிச்சி கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்க வில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.

அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதையடுத்து இப்போது போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். வடக்கு பகுதி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு நேற்று கள்ளக்குறிச்சி வந்தார். அவர் மாணவி சுவாதியின் பெற்றோர் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் இது பற்றி விசாரணை நடத்தினார். இதற்கிடையே மாணவி சுவாதியை பெற்றோர் அந்த பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
 
ஆசிரியைகள் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து சுவாதி சொன்ன தகவல்களை அவரது தந்தை சுரேஷ் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதில் சுவாதி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெளிவாக கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக